Sunday, August 21, 2011

மின்சாரக்கனவு ...


வடக்கும் தெற்கும் இணைய
வற்றாத நதி வேண்டும் ...அதில்

மாநிலம் தோறும் குறுக்கே
மின்நிலையம் அமைந்திட வேண்டும்
மறுகரையில் மின்கம்பங்கள்
மாநில எல்லைகளாக பெறவேண்டும்
யாருக்குமில்லை எல்லோருக்கும்
சொந்தம் இந்த நாடு என்ற
இந்திய மின்சாரம் அதன்
கம்பிகளில் பாய்ந்திட வேண்டும்
காணிநிலம் தந்த பராசக்தியே ..! இந்த
கனவு பலித்திட வேண்டும் ...

Thursday, August 11, 2011

அடுத்த வாரிசு


அடுத்து யார் ?
அரியணையில் அமர்வார்
அறிவிக்கும் உரிமை
அரசருக்கு உண்டு
பண்டைக்காலத்தில் ....
பனைமரம் போல்
பக்கத்தில் நானிருக்க
எதிரே நின்றவளைக்கு
இருக்கையை கட்டிவிட்டு
இறங்கி போய் விட்டான்
மெட்ரோ ரயிலில் இன்று

Monday, August 8, 2011

காலப் பறவை: சமணமும் தமிழும் - நூல் விமர்சனம்

காலப் பறவை: சமணமும் தமிழும் - நூல் விமர்சனம்
மிகவும் அருமையான தகவல்...புத்தகம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் ...தசாவதாரத்தில் (திரைப்படம் ) ஒரு வசனம் வரும் ... வேற்று மதம் தோன்றாத காலத்தில் .. சைவ , வைணவ மதத்தினர் அடித்துக் கொண்டர்கள் என்று ..இதில் சமண மதமும் அடங்கும் போலிருக்கு ...